இலங்கை

பெற்றோர் இல்லாத நேரம் யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடிய நபர்!

பெற்றோர் வெளியே சென்றதை அட்டுத்து வீட்டில் தனியாக இருந்த 18 வயது யுவதி ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் பண்டாரவளை – அம்பேதன்டகம பகுதியில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த யுவதி தனியாக இருந்த போது வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் குறித்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின் வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் குறித்த யுவதி தனக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

தற்போது பண்டாரவளை அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் பிரகாரம் குறித்த யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதியினை துஷ்பிரயோகம் செய்த மர்ம நபரைத் தேடி, பொலிஸார் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button