பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் தமது கணவரின் நிலை யாருக்கும் வேண்டாம் என கூறி, பொது மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த ஜோஷ் மெல்லர் என்பவரின் மனைவியே தற்போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்தவர்.
39 வயதான ஜோஷ் மெல்லர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதப்படுத்தி வந்துள்ளதுடன், தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அவதிப்பட்டு வருகிறார்.
ஜோஷ் மெல்லரின் மனைவி மிராண்டா மெல்லர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பதால், தமது கணவரின் நிலை யாருக்கும் வேண்டாம் எனக் கூறி, பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தி வருகிறார்.
மிராண்டா மில்லரின் கோரிக்கையை ஏற்று பலரும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவருக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதாலையே, தற்போது தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாக கூறும் மிராண்டா, ஒருவேளை தாமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதித்து, கொரோனா பாதிப்புக்கு இலக்காகியிருந்தால் தமது பிள்ளைகளை யார் கவனிப்பார்கள் என வினவியுள்ளார்.
இதனாலையே, இது போன்ற இக்கட்டான சூழல் வரவேண்டாம் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மிராண்டா மில்லர் கோரிக்கை விடுத்து வருகிறார்.