கிளிநொச்சியில் 20 – 30 வயது பிரிவினருக்கு முதற் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர் வரும் திங்கட்கிழமை முதல் 20 வயது தொடக்கம் 30 வயது பிரிவினருக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாகத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 – 30 வயது பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் 20ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

21ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராஜன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆதார வைத்தியசாலை ,தர்மபுரம் மத்திய கல்லூரி, பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version