நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க.. நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க.. பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடும்.
தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறேன். கேவலான மார்க் எடுத்து இருக்கிறேன். மதிப்பெண், தேர்வை விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் பெருசா ஜெயிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.
பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி – விக்னேஷ் சிவன்!!
டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் திகதி அறிவிப்பு!!!