வாகன விபத்து ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றமை தொடர்பில் இருவர் கைது!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு தண்ணீரூற்று குமுழ முனை வீதியில் கப்ரக வாகனமும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கப் வாகனமொன்றே விபத்துடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற கப்ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி ஒருவரும், சாரதியாக ஆள்மாற்றம் செய்ய முயற்சித்த இளைஞனுமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version