கொரோனா கால கட்டத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், கனேடிய மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் இருந்ததை விட மக்களின் கோபம் அதிகரித்துள்ளதையும் அந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இது அரசு மாற்றத்துக்கான நேரம் அல்ல என்று 60 சதவிகித வாக்காளர்கள் கருதுகிறார்கள்.
68 சதவிகித மக்கள் கொரோனா கால கட்டத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கக்கூடாது என்கிறார்கள். இந்த எண்ணிக்கை தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நேரத்தில் இருந்ததை விட 13 சத விகிதம் அதிகம் ஆகும்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பாதிப்பேர் தங்களுக்கு எந்த கட்சியையும் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் தேர்தல் பிரச்சாரம் துவங்கப்பட்டதிலிருந்து 11 சத விகிதம் அதிகரித்துள்ளது. Ipsos என்ற அமைப்பு கடந்த வார இறுதியில் 2,000க்கும் அதிகமான கனேடியர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 62 சதவிகிதத்தினர், தாங்கள் திங்களன்று நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிப்போம் என்பது உறுதியில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஆக, இந்த தேர்தல் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கணிக்கமுடியாத ஒரு நிலை தற்போது காணப்படுகிறது எனலாம்.