அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்க்க முடியாதென தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் நெல்லுக்கு இடையே அரசாங்கம் கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளது.

இதன் விளைவாக இந்த முடிவை நாங்கள் பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்பட்டவுடன் இந்த நிலைமை ஏற்படும் என தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பொருட்களும் பாரியளவு விலை அதிகரித்துள்ளது. எனினும் நெல்லுக்கு தேவையான கட்டணத்தை அரசாங்கம் செலுத்துவதில்லை. இதனால் பாரிய அசெளகரியத்திற்குள்ளாகியுள்ள விவசாயிகளால் நெல் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளது. நூற்றுக்கு 50 வீதம் அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளது. முடக்கநிலை தளர்த்தப்பட்டவுடன் உணவகங்கள் திறக்கப்படும். அரிசிகளின் தேவை அதிகரிக்கும்.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 65 லட்சம் கிலோ கிராம் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை ஒரு போதும் தவிர்க்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

Exit mobile version