வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு தடையா???

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாட்டிற்கு வரும் போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சிலர் தவறாக புரிந்துள்ளனர். அவர்கள் வெளியிடும் கருத்துக்களின் மூலம் தெரியவருவதாக நிதிஅமைச்சு தெரிவித்துள்ளது.

மீண்டும் இலங்கைக்கு வரும் போது டொபி, சொக்கலட் உணவு வகைகளும் தொலைகாட்சி போன்ற இயந்திரங்களையும் கொண்டுவர முடியாதா என வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்கள் கேள்விகளை  எழுப்புகின்றனர்.

வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வருகின்ற  பொருட்களுக்கு முன்னர் காணப்பட்ட நடைமுறைகள் அவ்வாறே உள்ளதாகவும் வெளிநாட்டில் இருந்ந்து பொருட்களை கொண்டுவருவதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும் நிதிஅமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Exit mobile version