இலங்கையின் இன்றைய வானிலை பற்றிய தகவல்!

இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யலாம் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40 முதல் 50கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version