ரத்வத்தே அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்!

லொஹான் ரத்வத்தே வகித்து வந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுபதவியை  இராஜினாமா செய்வதற்கான கடித்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்களுக்கான பொறுப்பினை ஏற்று இத்தீர்மானத்தை அவர் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனது பதவியினை இராஜினாமா செய்வதற்கான பரிந்துரையினை  ஏற்று கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் லொஹான் ரத்வத்தே கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சு குறித்து ஊடகங்களில் வௌியாகும் தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக லொஹான் ரத்வத்தே தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளை மிரட்டியவரின் அமைச்சு பதவியை பிடுங்கிய பிரதமர்!

தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்குங்கள் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர்!

அநுராதபுரம் சிறைச்சாலை சிசிடிவிகள் செயலிழக்கும் நிலையில்?

Exit mobile version