ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இச்சம்பவம் குறித்து எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் இத்தாலியில் இருந்து தொலைபேசியின் ஊடாக அறிவித்துள்ளார்.
*பிந்திய செய்தி*
ரத்வத்தே அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்!
முன்னைய செய்திகள்
தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்குங்கள் எதிர்க்கட்சித் தலைவர்!