அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சரை பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் மூலமே சஜித் பிரேமதாஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது
அரச அமைச்சரின் இழிவான இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த அருவருப்பான சட்டவிரோதமான செயல் ஆனது நமது நாட்டில் இருக்கின்ற அராஜக நிலைமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
எமது நாட்டிலே இருக்கின்ற அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர்!
அநுராதபுரம் சிறைச்சாலை சிசிடிவிகள் செயலிழக்கும் நிலையில்?
*பிந்திய செய்தி*
ரத்வத்தே அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்!
தமிழ் கைதிகளை மிரட்டியவரின் அமைச்சு பதவியை பிடுங்கிய பிரதமர்!