பண வசதியற்றவர்களின் இறுதி கிரியைகளுக்கு உதவி வழங்கப்படும்!

கொரோனா தொற்றால் தினமும் மரணங்கள் அதிகரிக்கும் நிலையில் கொரோனாவால் உயிரிழக்கின்ற நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களது இறுதி கிரியைகளை தன்னுடைய சொந்த பணத்தில் செய்து கொடுக்க தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளார்.

தொற்றால் மரணம் அடைகின்ற நபர்களது குடும்ப வறுமை நிலையை அப் பகுதி கிராமசேவகரின் உறுதிபடுத்தல் கடிதத்துடன் நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களையோ அல்லது யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்தவரின் இறுதிக் கிரியைகளை நாடாத்துவதற்கு குடும்ப சூழ்நிலை இல்லை என்பதை  உறுதிபடுத்தப்பட்டால் இறுதி கிரியைக்கான போக்குவரத்து வசதி, பிரேதபெட்டி, தகனத்திற்குரிய கட்டணம் உட்பட அனைத்தினையும்  தியாகி அறக்கொடை நிறுவனம் செய்து கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version