ஆப்கானிஸ்தான் முழுதும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தலிபான்களின் இடைக்கால ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மக்களின் இயல்புநிலை வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மிகக் குறைந்தளவான வியாபாரங்கள் நடைபெறுவதால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நிலைமைகள் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் திருட்டுகள் தற்பொழுது குறைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல வாரங்களாக மூடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானில் வங்கிகள் கடந்த 30ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.