உயிரிழந்ததாக கூறப்பட்ட அல்-கொய்தா தலைவர் உயிருடன்?

மரணித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு வந்த ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி வெளியாகிய காணோளி ஒன்றில் வெளியாகியுள்ளார்.

கடந்த ஆண்டு இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் ஒன்றில் இவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் 20வது ஆண்டு விழா இடம்பெற்றதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் இவர் தோன்றியதாக இஸ்லாமிய தீவிரவாத இணையத்தளங்களை கண்காணிக்கும் SITE எனும் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

குறித்த காணோளி 60 நிமிடங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த காணொளி காட்சிகள் சமீபத்தியவையா அல்லது முன்னர் எடுக்கப்பட்ட காணோளிகள் தற்போது வெளியிடப்பட்டதா என்பது குறித்து தற்சமயம் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனெனின் “ஆப்கானிஸ்தான் முழுதும் தலிபான்கள் கைப்பற்றி வெற்றி அடைந்துள்ள நிலையில் இது பற்றி அந்த காணொளியில் குறிப்பிடவில்லை.

எனினும், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சிரியாவில் இடம்பெற்ற அல்-கெய்தா அமைப்புடன் தொடர்புபட்ட ஹுராஸ் அல்-டீன் குழு நடாத்திய “ஜெருசலேம் யூதமயமாக்கல்” மற்றும் ரஷ்யாவின் இராணுவத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து அல்-ஜவாஹிரி பேசியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version