விமானங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி விளையாடும் தாலிபான்கள்!

கடந்த 30ம் திகதி ஆப்கானை விட்டு முற்று முழுதாக அமெரிக்க படைகள் வெளியேறும் போது விட்டு சென்ற விமானங்கள் மற்றும்  ஹெலிகாப்டர்களின் இறக்கைகளில் தாலிபான்கள் ஊஞ்சலாடும் காணொளி தற்போது மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 30ம்திகதி முன்பாக படைகளை மீளவும் தனது நாட்டுக்கு எடுத்து கொண்டது.

அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு செல்லும் போது ஏராளமான ஆயுதங்களையும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தி விட்டுச் சென்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா விட்டு சென்ற விமானத்தின் இறக்கையில் துளையிட்டு சில தாலிபான் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள்  ஊஞ்சல் ஆடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version