ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பும் விடையத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்களது ஏகோபித்த கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினை எவராலும் பிளவுபடுத்த முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய தமிழ் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்ப தயாரித்த அறிக்கையில் கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய இரு பங்காளி கட்சிகள் (ரெலோ, புளொட்) கையெழுத்திட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட இல்லை. ஆகவே, இது தொடர்பில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.